• சற்று முன்

    காட்பாடியில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோர்!

    வேலூர் மாவட்டம், காட்பாடியில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸாரோ அந்த சமூக விரோதியிடமே மாமூல் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

    வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் ஜோதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்ததுள்ள நுழைவு வாயில் எதிர் பகுதியில் சம்பத் என்ற சமூக விரோதி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். ஆனால் அவர் நடத்துவது பெட்டிக்கடையே அல்ல. டாஸ்மாக் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக வாங்கி வந்து கூடுதலாக விலை வைத்து ஒரு பாட்டிலுக்கு ரூபாய் எழுபது வீதம் கூடுதல் லாபம் வைத்து ஏழை, எளிய மக்களை ஏமாற்றி மது பாட்டில்களை விற்பனை செய்து வருகிறார். ஒரு குவாட்டர் மது பாட்டிலின் விலை ரூபாய் 200 என்று விற்பனை செய்து வருகிறார். இப்படி ஒரு நாளைக்கு 500 முதல் 750 பாட்டில்கள் வரை விற்பனை செய்துவிட்டு இவர் கடையை மூடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதாவது டாஸ்மாக் திறந்திருக்கும் போது இவரது பெட்டிக்கடை முடி இருக்கும். டாஸ்மாக் மூடியவுடன் இவரது பெட்டிக்கடை திறந்து இருக்கும் .இப்படி டாஸ்மாக்கின் ஒரு கிளை நிறுவனமாக இவரது பெட்டிக்கடை இயங்கி வருகிறது. இவரை நாடிவரும் காட்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றும் சில காக்கிகளுக்கு மாமூலை கொடுத்துவிட்டு இவர் தாராளமாக தனது பிழைப்பை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சமூக விரோதிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய போலீசார் இவரிடம் கையேந்தி பிச்சை எடுத்து அவர் தரும் மாமூலை வாங்கிக் கொண்டு செல்கின்றனர் என்பது வெட்கக்கேடான விஷயம் ஆகும். ஆதலால வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் இந்த பிரச்சனையில்  நேரடியாக தலையிட்டு கடும்  நடவடிக்கை எடுத்து இந்த பெட்டிக்கடையை மூடி சீல் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் குடிமகன்கள் எதிர்பார்க்கின்றனர். அதாவது மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் யாராவது இந்த பெட்டிக்கடையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த பெட்டிக்கடையை மூடி நிரந்தரமாக சீல் வைக்க வேண்டிய நடவடிக்கைகளை கட்டாயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேறற்கொள்வார் என நம்பிக்கை வைத்து காத்திருப்போம்.

     செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad