பேரணாம்பட்டில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகள் செய்யும் வணிக தொடர்பாளர் சாருமதி
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு எம். ஜி. ஆர். நகர், கே. கே. நகர், ஜெ. ஜெ. நகர், புதிய லைன், எம். லைன், சிவராஜ் நகர் போன்ற பகுதிகளில் முதியோர், ஊனமுற்றோர், முதிர்கன்னிகள், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோர்களுக்கு பேரணாம்பட்டு பக்காலப்பல்லி பகுதியைச் சேர்ந்த சாருமதி தமிழக அரசின் உதவித் தொகைகளை வழங்கி வருகிறார். ஆனால் சாருமதி என்று இந்த வேலைக்கு வந்தாரோ அன்றிலிருந்தே சாருமதியின் கணவரும், தபால் துறை ஊழியருமான முரளிதான் இந்த வேலையை செய்து வருகிறார். சாருமதிக்கு நாம் எந்தெந்த பகுதியில் யார் யாருக்கு உதவி தொகைகளை வழங்க வேண்டுமென்றெல்லாம் சாருமதிக்கு தெரியாது. சுழற்சி முறையில் சாருமதியும், அவரது கணவனும் ஒரு மாதத்திற்கு ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை உதவித்தொகை வழங்குவதில் கொள்ளையடிப்பதகவும் தெரியவந்துள்ளது. இப்படித்தான் ஒரு முறை உதவித் தொகை வழங்குவதில் பணத்தை கையாடல் செய்து விட்டதாக கூறி தெருவில் சாருமதியையும், அவரது கணவன் முரளியையும் பயனாளிகள் சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல் ஒரு சமயம் சேலம் அப்துல்லா என்பவரின் உதவித் தொகை பணத்தை கையாடல் செய்ததைக் கண்டித்து சேலம் அப்துல்லா நடுரோட்டில் படுத்துக் கொண்டு சாலை மறியல் செய்த சம்பவம் பற்றி பேரணாம்பட்டு பொது மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். மேலும் பேரணாம்பட்டு பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாருமதியின் வீட்டிற்கு முதியோர் உதவித் தொகை பெற வரும் பயனாளிகளை வரவழைத்து அலைகழிக்க வைக்கிறார் என்ற தகவலும் அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் ஒரு செய்தி உலா வந்து கொண்டுள்ளது. மேலும் ஏராளமான பயனாளிகளின் உதவித்தொகையை சாருமதி கையாடல் செய்வதாகவும், எல்லாவாற்றுக்கும் மேலாக சாருமதிக்கு பதிலாக அவருடைய கணவர் முரளிதான் பயனாளிகளுக்கு உதவித் தொகையை வழங்குகிறார் என்றும் தெளிவாக தெரிகிறது. இப்படியாக பல்வேறு முறை கேடுகளை செய்து வரும் வணிக தொடர்பாளர் சாருமதியும், அவருடைய கணவர் முரளியும் பல்வேறு பித்தலாட்ட காரியங்களை செய்து வருவதையும் தற்போது பேரணாம்பட்டு தாசில்தார் வினாயக மூர்த்தி பல மாதங்களுக்கு முன்பு சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தாராக பணியாற்றும் போது சாருமதியை அழைத்து வேலை உனக்கு மட்டும் தான் உன்னுடைய கணவர் முரளிக்கு அல்ல என்றும் இனி ஒரு தடவை முதியோர் உதவித் தொகை வழங்கும் போது உன்னுடைய கணவரை அழைத்துச் சென்றால் உன்னுடைய ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று சாருமதியை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே தற்போது சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தாராகவுள்ள கலைவாணி இதில் தலையிட்டு சாருமதி என்ன பணி செய்கிறார் என ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் போது அவரது தவறுகள் உறுதி செய்யப்பட்டால் சாருமதி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர் பார்ப்பாக உள்ளது.
கருத்துகள் இல்லை