• சற்று முன்

    போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 240 லிட்டர் பறிமுதல்!

    வேலூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 240 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

     வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.  மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சாராய வேட்டை நடத்தினர். இதில் சுமார் 240 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் மீது மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கும் அனுப்பி உள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய நடமாட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் கடத்துவது, விற்பனை செய்வது போன்றவை முற்றிலும் தடுத்து நிறுத்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் விடுத்துள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஆனால் கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்திய போலீஸார் டாஸ்மாக் மற்றும் வெளி மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதை இன்னும் தடுத்து நிறுத்தாமல் உள்ளனர். குறிப்பாக காட்பாடி உழவர் சந்தை பகுதியில் 24 மணி நேரமும் டாஸ்மாக் மற்றும் பல்வேறு மாநிணவர்களை இருந்து கொண்டுவரப்படும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன அவற்றை தடுத்து நிறுத்து ஏற்ற விற்பனை செய்யப்படுபவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஏனென்றால் 24 மணி நேரமும் காட்பாடி ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் இந்த மது பாட்டில்களை ரூபாய் 200 க்கு கள்ள மார்க்கெட்டில் வாங்கி குடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள ஜோதி கலைக்கல்லூரி நுழைவு வாயில் எதிரில் சம்பத் என்பவர் கள்ள மார்க்கெட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை கூடுதல் விலைவைத்து ரூபாய் 200 க்கு விற்பனை செய்து வருகிறார். இது போன்ற நபர்களையும் கைது செய்து இவர்களிடமிருந்து குடிமகன்கள தப்பிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இதில்  சம்பத் என்பவர் காட்பாடி காவல் நிலையத்துக்கு நான் மாமூல் செலுத்துகிறேன் என்னை எவனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று மார்தட்டுகிறார். இப்படி கொக்கரிக்கும் சம்பத் மீது குண்டர தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பததே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பது எப்போது? என்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்படும் நாள் என்னாளோ என்பதை ஆவலோடு ஒட்டுமொத்தமாக அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உழவர் சந்தை அருகில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் மற்றும் ஜோதி கல்லூரி எதிரில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து  விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்  ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    செய்தியாளர் : காட்பாடி வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad