• சற்று முன்

    விடுதலை சிறுத்தைகளின் கணியம்பாடி ஒன்றிய தலைவர் பாதிரியார் போர்வையில் கலெக்ஷன் கண்ணதாசன்! காவல்துறை ஆசியுடன் மிரட்டல் வசூல் !

    விடுதலை சிறுத்தைகளின் வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றிய தலைவர் என்ற போர்வையில் கலெக்ஷன் கண்ணதாசன் செயல்பட்டு மண் கடத்தல் பேர்வழிகள், காட்டன் சூதாட்டம் ,வெளி மாநில லாட்டாரி விற்பவர்கள், கஞ்சா விற்பவர்கள், கள்ளச் சாராயம் விற்பவர்கள், போலி மதுபானம் விற்பவர்கள்,  சூதாட்ட கும்பல்களுடன் கை கோர்த்து கொண்டு வேலூர் தாலுக்கா போலீசார் ஆசியுடன் மிரட்டல் மாமூல் வசூலித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கலெக்ஷன் கண்ணதாசன் மாமூல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என நோட்டீஸ் போட்டு மிரட்டல் கலெக்ஷனில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்.

    கலெக்ஷன் கண்ணதாசன் விடுதலை சிறுத்தைகள் பதவி மற்றும் பாதிரியார் போர்வையில் புரிந்து வரும் லீலைகள் கண்டு பொதுமக்களும், கிறிஸ்தவர்களும் முகம் சுளிக்கும் வேலைகள் செய்து வருகின்றனர்.

    அல்லிவரத்தில் உள்ள சோப் கம்பெனியில் மிரட்டி மாத மாமுல் வசூல் செய்துவருகின்றனர்.கீழ்அரசம்பட்டு சீனிவாசன் கணியம்பாடி புதூர் நீலகண்டன் மகன் சூர்யா, பாலாத்துவண்ணான் அசோகன் ஆகியோரிடம் மாத மாமூல் மண் கடத்துபவர்கள் மூலம் வசூல் செய்து வருகின்றனர். 

    ஆனந்த் மற்றும் கலெக்ஷன் கண்ணதாசன இருவரும் ராணிப்பேட்டை, ஆற்காடு, கண்ணமங்கலம் மலைப்பகுதிகளான ஜார்தான் கொல்லை மற்றும் வேலூர் கணியம்பாடி தோட்டப்பாளையம், அகிய பகுதிகளில் ஏஜென்டுகளை நியமனம் செய்து அவர்கள் மூலம் அப்பாவிகளை வரவழைத்து லோன் வாங்கித்தருகிறோம் என ஏமாற்றுவதை தொழிலாக கொண்டுள்ளனர்.

    தாழ்தப்பட்ட மக்களுக்கும் மலைவாழ் அப்பாவி மக்களுக்கும் மத்திய அரசின் கடனுதவி பெற்று தருகிறோம் இருசக்கர வாகனம் டிராக்டர் மானியத்தில் வாங்கித்தரகிறோம் என ஆனந்த் மற்றும் கலெக்ஷன் கண்ணதாசன் கொண்ட கூட்டணி அப்பாவி மக்களிடம் வசூல் லீலைகள் கொடி கட்டி காவல்துறை ஆசியுடன் பறந்துவருகிறது.

    மலைவாழ் மக்கள் பேரில் சிலருக்கு டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாங்கி கொடுத்துவிட்டு அதை காண்பித்து பலரிடம் ஆவணங்களை பெற்று அவர்கள் பெயரில்  வாகனங்களை வாங்கி வெளி மார்கெட்டில் விற்பனை செய்துவிட்டனர் தற்பொழது வாகனமே எனக்கு வழங்க வில்லை நான் எப்படி கடன் கட்டுவது என அப்பாவி மலைவாசிகள் பலர் புலம்பி வருகின்றனர்.

    வேலூர் வட்டாட்சியர் கோபி மூலம் இலவச மனைப்பட்டா வாங்கித்தருகிறேன் என பலரிடம் பணம் வசூல்செய்துவிட்டு பட்டா வாங்கித்தராமல் அப்பாவி மக்களை இருவரும் அலைய வைத்துவருகின்றனர்.

    இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருகிறோம் போலி பணி ஆணை வழங்கி அந்த ஆணை போலி என கண்டறியப்பட்டு பாதிகப்பட்டவர் எஸ்.பியிடம் புகாரளித்து அப்புகாரின்பேரில் வேலூர் தாலுக்கா போலிசார் மற்றும்;. தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பழம் குமார் துணையுடன் கட்டை பஞ்சாயத்து பேசி மேற்படி வழக்கில் கைதாகாமல் இருவரும் தப்பிவிட்டனர். 

    காவல்நிலைய ஆசியுடன் கட்டை பஞ்சாயத்து கலெக்ஷன் என கொடி கட்டி பறந்து வரும் மேற்படி நபர்களின் செயல்களால் விடுதலை சிறுத்தைகளின் கட்சிக்கு அவப்பெயர் மற்றும் இழிவு ஏற்படுத்தும் செயல்களை செய்துவரும் மேற்படி நபர்களை கட்சி தலைமை கட்டம் கட்டுமா?.

    செய்தியாளர் : காட்பாடி வாசுதேவன் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad