திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்ப்பாளர் போக்கினை கண்டித்து மாபெரும் போராட்டம்
திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடந்த 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சங்கத்தின் தலைவர் ந. வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜி. சரவணன்,பொருளாளர் முனீர் பிரான், துணைச் செயலாளர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கத்தின் பொறுப்பாளர்கள் அருண்குமார், தினேஷ் குமார், சதீஷ், லோகேஷ், விக்னேஷ், கணேசன், ஆஞ்சி, மோகன், ராஜீவ் காந்தி உள்ளிட்டோ பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு எங்களது தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து பங்கேற்றது.
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் மாநிலத் தலைவர் இளசை கணேசன், பொருளாளர் ஆ. வீ.கன்னையா , இணைச் செயலாளர்கள் பால்ராஜ், சார்லஸ், என்.கே .முத்தையா மற்றும் தமிழ்நாடு செய்தித்துறை யூனியன் சார்பில் எண்ணூர் முரளி, அம்பத்தூர் கவிராஜன், சென்னை விஜய சங்கர், ஆத்தூர் பாண்டித்துரை, திருச்சி செந்தில்குமார், சேலம் கலியன், திருவண்ணாமலை முருகானந்தம் அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் வாலாஜா ஆர்.ஜே. சுரேஷ் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தோழர் ஆர், முல்லை, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் காசி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் இளசை கணேசன், பால்ராஜ், ஆ.வி. கண்ணய்யா, என். கே. முத்தையா ஆகியோர் விளக்க உரையாற்றினார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் அவர்களின் பத்திரிகையாளர்களிடம் பாகுபாடு காட்டப்படுதல். பிரித்து ஆளுதல், அச்சுறுத்துதல் போன்ற நடவடிக்கைகள் குறித்தும் பத்திரிக்கையாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் வலியுறுத்தப்பட்டன.
பத்திரிக்கையாளர்களின் போராட்டம் குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு முறையாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை