ஹான்ஷி ராஜகுரு அவர்கள், வெற்றிப் பெற்ற, வீர, வீராங்கனைகளுக்கு, வெற்றிப்பதக்கங்களையும், நற்சான்றிதழ்களையும், முதலில் வழங்கி, துவக்கி வைத்தார்.
மலேசியாவில், ஈப்போ மாநிலத்தில், சோகே சர் அனந்தன் அவர்களால், ஆண்டுதோறும், பல தேசங்களிலிலிருந்து,1500 க்கும் மேலான கராத்தே வீர, வீராங்கனைகள், பங்கு கொள்ளும், சர்வதேச ஒகினவா கோஜுரியோ கராத்தே போட்டியில், கலந்துக் கொண்ட, அந்த சிறப்பான தருணத்தில், நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, மலேசியாவிற்கு சென்று கொண்டிருக்கும் நான், அன்று என்னைப் பார்த்து, நேசித்த, மலேசிய மாணவர்கள், ஆசிரியர்கள், அனைவரையும், இன்றுக் காணும்போது, அவர்கள் கூறிய, அந்த இனிமையான, நட்பின், மலரும் நினைவுகளாகிய, 1983 ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த, சர்வதேச கராத்தே போட்டியில், கலந்துக் கொண்டு, சர்வதேச கிரேண்ட் சேம்பியனாக, இரண்டு தங்கப்பதக்கங்களை, நான் வென்றெடுத்த, அந்த மகிழ்ச்சிக்குரிய என் வெற்றியையும், அவர்கள் அனைவரும்,
அன்று கண்டுகளித்த, என்னுடைய கராத்தே (Karate Demonstrations) செயல்முறைகளையும், அவர்கள் ஞாபகத்துடன், என்னிடம் கூறி மகிழும்போது, அவற்றையெல்லாம் என் செவிகளில், இப்போது அந்த கராத்தே மாணவர்களிடமிருந்து கேட்கும்போது, என் இதயத்தில், ஏற்ப்பட்ட எல்லையில்லா, மகிழ்ச்சியில், என் கண்கள், ஆனந்த கண்ணீரால், கலங்க வைத்து விட்டன.
ஆகவே, தற்க்காப்புக்கலை பிறந்த, நமது இந்திய மண்ணில், அனைத்து இளைஞர்களும், இளைஞிகளும், தங்களது உடலையும், மனதையும், பாதுகாத்து, பலம் பெற்று, சிறப்பான குணங்களுடன், மற்றவர்களை நேசித்து, சேவை செய்து வாழ, உடற்பயிற்சியும், யோகா, தியானப் பயிற்சியும் செய்து, மகிழ்ச்சியுடன் வாழுங்கள், என, இறைவனை வேண்டி, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை