• சற்று முன்

    வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட எஸ.கே.சீனிவாசன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல்


    வேலூர் தொகுதியில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் எஸ.கே.சீனிவாசன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல்

    வேலூர் மாவட்டம், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேலூர் காட்பாடி தாலுகா, வள்ளிமலை கிராமத்தைச் சார்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரும், இராணுவப் படை,  துணை ராணுவப் படைகளுடன் மக்களின் நல்வாழ்வு சார்பாக, எல்லை பாதுகாப்பு படை நல வாரிய சங்கத்தின் மாநில தலைவரும், பாரதிய கிசான் ஜவான் பார்ட்டி கட்சி சார்பில் மாநிலத் தலைவருமான, கண்ணாயிரம் என்பவரின் மகன் எஸ்.கே.சீனிவாசன் சுயேட்சை வேட்பபாளராக, வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் / மாவட்ட ஆட்சியருமான வே.இரா. சுப்புலெட்சுமியிடம், வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

    இந்நிகழ்வின் போது நலச்சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சந்திரன், மாநில நிர்வாகிகள் ஜெயராமன், மனோகரன், எல்லை பாதுகாப்பு படை நலச் சஙகம் வேலூர் மாவட்ட தலைவர் கண்ணதாசன்  பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் சேர்மன் முருகேசன், துணைத் தலைவர் எல்.ஆரோக்கியராஜ், நிர்வாகிகள் இளங்கோவன், நடேசன், ஜே.கே.குமார், சுப்பிரமணி, சோமு, ராஜ்குமார், கேண்டீன் அதிகாரி பிரபாகரன், கேண்டீன் மேனேஜர்           பழனிசாமி மாநில, மாவட்ட நிர்வாகிகள், இராணுவ மற்றும் துணை இராணுவப் பாதுகாப்பு படை வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad