• சற்று முன்

    பேரணாம்பட்டு அடுத்த முரசப்பள்ளி டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை!


    வேலூர் மாவட்டம்,  பேரணாம்பட்டு அடுத்த முரசப்பள்ளி பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் ,ஒரு குவார்ட்டர் பிராந்தி பாட்டில் மீது ஐந்து ரூபாயும், ஒரு பீர் பாட்டில் மீது பத்து ரூபாயும், ஆஃப் என்று சொல்லப்படும் பாதி குவார்ட்டர் பிராந்தி பாட்டில் மீது பத்து ரூபாய் கூடுதலாக வைப்பதாகவும் மது பிரியர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட டாஸ்மாக்  மேலாளர் இந்த கடையில் நேரில் வந்து கள ஆய்வு செய்து தவறு செய்யும் டாஸ்மாக் கடையின் பணி மேற்பார்வையாளர் மீதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீதும் தக்க துறை ரீதியான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியில் உள்ள மதுப்பிரியர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    செய்தியாளர் : வாசுதேவன் 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad