விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் விருதுநகரில் வீடு பிடித்து குடியேரி விடுவோம்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் விருதுநகரில் வீடு பிடித்து குடியேரி விடுவோம் -ராதிகா என்னை மகனே என்று அழைத்தில் தவறில்லை *
விருதுநகர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேட்டி.
விருதுநகர் நாடாளுமன்ற அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவும் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிகு பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியாரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேமுதிக உடைய மறைந்த மாண்புமிகு விஜயகாந்த் அவருடைய வாழ்த்துக்களோடு நம்முடைய இனிய சகோதரர் விஜய பிரபாகரன் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சார பணியை நேற்றிலிருந்து தொடங்கி இருக்கிறார்கள்.
தொடர்ந்து அவருடைய நிர்வாகிகள் விருதுநகர் நாடாளுமன்றம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியின் உண்மையை உணர்வோடும் இந்த தேர்தல் பணிகளை மக்களை சந்திக்கிற பணியினை தொடர்ந்து நிர்வாகிகள் குறிப்பாக விருதுநகர் நாடாளுமன்றம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மிகப்பெரிய வெற்றி தருகின்ற நம்பிக்கையோடும் உண்மையை உணர்வோடும் இந்த பணிகளை தொடங்கி இருக்கிறோம்.
ஏற்கனவே கடந்த 20 21 சட்டமன்ற தேர்தலில் அண்ணா திமுக வெற்றி வாய்ப்பு இழந்தன. ஆகவே நிச்சயமாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மக்களுக்கு ஏற்படுகின்ற எதிர்ப்பை பயன்படுத்தி மக்கள் விரோத சக்தியை இன்றைக்கு மக்கள் புரிந்து கொண்டு விட்ட காரணத்தால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணி வேட்பாளராக இனிய சகோதரர் விஜய் பிரபாகரன் குறிப்பாக விருதுநகர் நாடாளுமன்றம் நமக்கு ஒரு மிக முக்கியத்துவமான நாடாளுமன்றமாக தொகுதி.
இன்றைக்கு பல்வேறு திரைப்படங்களில் மட்டுமல்ல மக்களிடமும் நல்ல அன்பை பெற்று இருந்த மதிப்பிற்குரிய விஜயகாந்த் உடைய செல்வன். விஜய பிரபாகரன் போட்டியிட மிக நல்ல வாய்ப்பாக நாங்கள் கருதுகிறேன். இளைஞராக அவருடைய பணி சிறப்பான பணியாக அமையும் என்று அனைத்திந்திய அண்ணா திமுகவின் பொது செயலாளர் அதற்கான பணிகள் அவருக்கு ஆற்றலும் திறமை இருக்கிறது.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் மதுரை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் ஏற்கனவே இருக்கின்றன அதில் திருப்பரங்குன்றம் திருமங்கலம் தொகுதிகள் ஏற்கனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை கொடுத்தார்கள். அருதான்மையில் உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதியிலே மாண்புமிகு முன்னாள் அமைச்சர் உதயகுமார் 15 ஆயிரம் வாங்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை