சேர்பாடியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியம், சேர்பாடி ஊராட்சி கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ,மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மாவட்ட திட்டக்குழு இயக்குநர் ஆர்த்தி, ஒன்றியக் குழு பெருந்தலைவர் சி.பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் ஒன்றிய கவுன்சிலர் என்.பிரகாஷ், வட்டாட்சியர் வேண்டா மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை