Header Ads

  • சற்று முன்

    செய்யாறு மினி ஸ்டேடியத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் 400 மீட்டர் ஓடுதளம் திறப்பு


    செய்யாறு மினி ஸ்டேடியத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட 400 மீட்டர் ஓடுதளம் சார் ஆட்சியர் பல்லவிவர்மா திறந்து வைத்தார். வாலிபால் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் பரிசு வழங்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மினி ஸ்டேடியத்தில் தனியார் பங்களிப்புடன் ரூ.80 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட 400 மீட்டர் ஓடுதளத்தை செய்யாறு சார் ஆட்சியர் பல்லவிவர்மா திறந்து வைத்து ஒட்ட பந்தயப் போட்டிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 32 அணிகள் பங்கேற்ற வாலிபால் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கினார்.  இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், செய்யாறு டிஎஸ்பி சின்னராஜ் ,காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன், செய்யாறு செஸ் டெவலப்பர்ஸ், லோட்டஸ் ஃபுட்வேர் எண்டர்பிரைசஸ், ஈஸ்ட் விண்ட் ஃபுட்வேர் நிர்வாகிகள் கோட்டா ராஜசேகர், மணிமாறன், கல்யாண சுந்தரம் மற்றும் நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்ட செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad