Header Ads

  • சற்று முன்

    கருணாநிதிக்கு அரசியல் வாழ்வு எம்ஜிஆர் போட்ட பிச்சை: அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் அமுதா காட்டம்! வேலூர், மார்ச் 15- மாணவர்களையும், இளைஞர்களையும் கஞ்சா அடிமைகளாக்க விட்டனர் திமுகவினர் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்..ஆர்.கே. அப்பு பேசினார். வேலூர் மாவட்டம் ,காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பாக காட்பாடி சட்டமன்ற தொகுதி பாராளுமன்ற தேர்தல் 2024 குறித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான திண்டிவனம் அமுதா கலந்து கொண்டு பேசுகையில், சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா கருணாநிதி ஒரு டீலிங்கை ஆ.ராசாவிடம் வைத்தார். கனிமொழி உனக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் வரும் மணி எனக்கு எனச் சொல்லி ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த ஆ.ராசா எம்.ஜி.ஆரைப் பற்றி கேவலமாக பேசுகிறார். எம்ஜிஆரின் வரலாறு ராசாவிற்கு தெரியுமா?. உன் தலைவன் கருணாநிதிக்கு அரசியல் வாழ்வு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போட்ட பிச்சை. நாவலர் நெடுஞ்செழியன் தான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும். ஆனால் கருணாநிதி எம்ஜிஆரின் காலை பிடித்து கெஞ்சி முதலமைச்சர் ஆனார். கருணாநிதி அரசியல் வாழ்விற்கு வித்திட்ட தலைவர் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர் எம்ஜிஆர் தான். எம்ஜிஆர் மட்டும் இல்லை என்று சொன்னால் இந்நேரம் கருணாநிதியின் சொந்தத் தொழில் பீபியோ மேளமோ வாசித்துக் கொண்டிருந்திருப்பார் கருணாநிதி எனக் கடுமையாக சாடினார். அதனை தடுத்து நிறுத்தியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். திமுகவோடு எல்லா பரதேசிகளும் கூட்டணி வைத்துள்ளனர். வெட்கம் கெட்ட காங்கிரஸ் கட்சியினர் தலையை சொரிந்து கொண்டு கூட்டணி வைத்துள்ளனர். வைகோ ஒரு சைக்கோ. இன்று சீமான் பழைய சாமான் ஆகிவிட்டார். திமுகவை எதிர்த்து யாரும் வாய் திறந்து பேசுவதில்லை. ஸ்டாலின் கோயம்புத்தூரில் பேசுகிறார் எந்த தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் திமுக ஜெயிக்கும் என்று. கனவில் தான் நீங்கள் ஜெயிப்பீர்கள். இன்னும் ஒன்றரை மாதத்தில் எம்பி தேர்தல் வருகிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். எப்பேர்பட்ட காங்கிரசோடு நீங்கள் உறவு வைத்துள்ளீர்கள். காங்கிரஸ் திமுககாரன் எந்நாளும் மறந்திருக்கக் கூடாது. இந்திரா காந்தி தமிழ்நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வந்து திமுகவைச் சேர்ந்தவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இதே கருணாநிதி கூறினார் காங்கிரசோடு உறவு கிடையாது எனக் கூறினார். அவர் கூறி இரண்டு மாதங்களில் அதே இந்திரா காந்தியுடன் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக் கூறினார். இதனை நாட்டு மக்களாகிய நாம் மறந்திருக்க மாட்டோம். ஸ்டாலினுக்கு தெம்போ திராணியோ இருந்தால் யாருடனும் கூட்டணி வைக்காமல் நாளை தேர்தல் வரட்டும் ஒத்தைக்கு ஒத்தை நின்று பார்ப்போமா. 40 தொகுதியிலும் ஒரு தொகுதியில் கூட திமுக டெபாசிட் வாங்க முடியாது. அதுதான் இன்றைக்கு உள்ள நிலைமை. அதிமுகவிற்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். மலிவு விலையில் போதை, கஞ்சா, அபின் போன்றவை கிடைக்கின்றது. தமிழகத்தில் எவ்வளவு வேகத்தில் என்று போதையும் ,கஞ்சாவும் பரவி வருகின்றது .ஒன்பது வயது பிள்ளையை கற்பழித்து கொலை செய்து சாக்கடையில் வீசி விட்டு செல்கின்றனர். காரணம் கஞ்சா போதை .இதற்கெல்லாம் காரணம் திமுகவின் அயலனினுடைய செயலாளர் ஜாபர் சாதிக் தான் .ரூ.3000 கோடி உலக அளவில் போதை பொருளால் கொள்ளையடித்து வைத்துள்ள ஒரு நபர் இதுவரை ஸ்டாலின் ஒரு நாளாவது எனக்கும் ஜாபர் சாதிக்கும் சம்பந்தமில்லை எனக் கூறியிருப்பாரா?. இந்த போதைப் பொருளை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன .இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னதாக வேலூர் மாநகர் மாவட்ட செயலாளரான எஸ். ஆர். கே. அப்பு பேசுகையில், மாணவர்களையும், இளைஞர்களையும் கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையாக்கிய திமுக வேண்டுமா?. இளைஞர்கள் நல்வழிப்பட வேண்டும் என்றால் அதிமுகவிற்கு வாக்களியுங்கள். கஞ்சாவிற்கு அடிமையாக வேண்டுமென்றால் திமுகவிற்கு வாக்களியுங்கள்.. மருந்துகள் வைக்கும் அறையில் பணத்தை பதுக்கி வைத்தவர் அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன். சிமெண்ட் குடோனில் பணத்தை பதுக்கியவர் வேலூர் எம்பி கதிர்ஆனந்த். இவர்களுக்கா உங்கள் ஒட்டு என்று தெருமுனை பிரச்சார கூட்டத்தில் பேசினார்.


    மாணவர்களையும், இளைஞர்களையும் கஞ்சா அடிமைகளாக்க விட்டனர் திமுகவினர் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்..ஆர்.கே. அப்பு பேசினார்.

    வேலூர் மாவட்டம் ,காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பாக காட்பாடி சட்டமன்ற தொகுதி பாராளுமன்ற தேர்தல் 2024 குறித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான திண்டிவனம் அமுதா கலந்து கொண்டு பேசுகையில்,

    சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா  கருணாநிதி ஒரு டீலிங்கை ஆ.ராசாவிடம் வைத்தார். கனிமொழி உனக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் வரும் மணி எனக்கு எனச் சொல்லி ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த ஆ.ராசா  எம்.ஜி.ஆரைப் பற்றி கேவலமாக பேசுகிறார். எம்ஜிஆரின் வரலாறு ராசாவிற்கு தெரியுமா?. உன் தலைவன் கருணாநிதிக்கு அரசியல் வாழ்வு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போட்ட பிச்சை. நாவலர் நெடுஞ்செழியன் தான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும். ஆனால் கருணாநிதி எம்ஜிஆரின் காலை பிடித்து கெஞ்சி முதலமைச்சர் ஆனார். கருணாநிதி அரசியல் வாழ்விற்கு வித்திட்ட தலைவர் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர் எம்ஜிஆர் தான். எம்ஜிஆர் மட்டும் இல்லை என்று சொன்னால் இந்நேரம் கருணாநிதியின் சொந்தத் தொழில் பீபியோ மேளமோ வாசித்துக் கொண்டிருந்திருப்பார் கருணாநிதி எனக் கடுமையாக சாடினார். அதனை தடுத்து நிறுத்தியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

    திமுகவோடு எல்லா பரதேசிகளும் கூட்டணி வைத்துள்ளனர். வெட்கம் கெட்ட காங்கிரஸ் கட்சியினர் தலையை சொரிந்து கொண்டு கூட்டணி வைத்துள்ளனர்.

    வைகோ ஒரு சைக்கோ. இன்று சீமான் பழைய சாமான் ஆகிவிட்டார். 

    திமுகவை எதிர்த்து யாரும் வாய் திறந்து பேசுவதில்லை. ஸ்டாலின் கோயம்புத்தூரில் பேசுகிறார் எந்த தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் திமுக ஜெயிக்கும் என்று. கனவில் தான் நீங்கள் ஜெயிப்பீர்கள்.

    இன்னும் ஒன்றரை மாதத்தில் எம்பி தேர்தல் வருகிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். எப்பேர்பட்ட காங்கிரசோடு நீங்கள் உறவு வைத்துள்ளீர்கள். காங்கிரஸ் திமுககாரன் எந்நாளும் மறந்திருக்கக் கூடாது. இந்திரா காந்தி தமிழ்நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வந்து திமுகவைச் சேர்ந்தவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். 

    இதே கருணாநிதி கூறினார் காங்கிரசோடு உறவு கிடையாது எனக் கூறினார். அவர் கூறி இரண்டு மாதங்களில் அதே இந்திரா காந்தியுடன் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக் கூறினார். இதனை நாட்டு மக்களாகிய நாம் மறந்திருக்க மாட்டோம்.

    ஸ்டாலினுக்கு தெம்போ திராணியோ இருந்தால் யாருடனும் கூட்டணி வைக்காமல் நாளை தேர்தல் வரட்டும் ஒத்தைக்கு ஒத்தை நின்று பார்ப்போமா. 40 தொகுதியிலும் ஒரு தொகுதியில் கூட திமுக டெபாசிட் வாங்க முடியாது. அதுதான் இன்றைக்கு உள்ள நிலைமை. அதிமுகவிற்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.

    மலிவு விலையில் போதை, கஞ்சா, அபின் போன்றவை கிடைக்கின்றது. தமிழகத்தில் எவ்வளவு வேகத்தில் என்று போதையும் ,கஞ்சாவும் பரவி வருகின்றது .ஒன்பது வயது பிள்ளையை கற்பழித்து கொலை செய்து சாக்கடையில் வீசி விட்டு செல்கின்றனர். காரணம் கஞ்சா போதை .இதற்கெல்லாம் காரணம் திமுகவின் அயலனினுடைய செயலாளர் ஜாபர் சாதிக் தான் .ரூ.3000 கோடி உலக அளவில் போதை பொருளால் கொள்ளையடித்து வைத்துள்ள ஒரு நபர் இதுவரை ஸ்டாலின் ஒரு நாளாவது எனக்கும் ஜாபர் சாதிக்கும் சம்பந்தமில்லை எனக் கூறியிருப்பாரா?. இந்த போதைப் பொருளை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன .இவ்வாறு அவர் பேசினார்.

     நிகழ்ச்சியில் முன்னதாக வேலூர் மாநகர் மாவட்ட செயலாளரான எஸ். ஆர். கே. அப்பு பேசுகையில், மாணவர்களையும், இளைஞர்களையும் கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையாக்கிய திமுக வேண்டுமா?. இளைஞர்கள் நல்வழிப்பட வேண்டும் என்றால் அதிமுகவிற்கு வாக்களியுங்கள். கஞ்சாவிற்கு அடிமையாக வேண்டுமென்றால் திமுகவிற்கு வாக்களியுங்கள்..

    மருந்துகள் வைக்கும் அறையில் பணத்தை பதுக்கி வைத்தவர் அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன்.சிமெண்ட் குடோனில் பணத்தை பதுக்கியவர் வேலூர் எம்பி கதிர்ஆனந்த். இவர்களுக்கா உங்கள் ஒட்டு என்று தெருமுனை பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

    வேலூர் மாவட்ட செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad