Header Ads

  • சற்று முன்

    அரசு நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகள்.தமிழ் நாடகம் - பாராட்டிய மாவட்ட ஆட்சியர். உணர்ச்சி பெருக்கில் அழுத ஆசிரியர்

    சங்க இலக்கிய தமிழ் ஆங்கில நாடகங்களை தத்ரூபமாக நடித்துக் காட்டிய அரசு நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகள்.தமிழ் நாடகம் முடிவுற்றதும் மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.வியந்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர். உணர்ச்சி பெருக்கில் அழுத ஆசிரியர்

    திருவாரூர் மாவட்டம் வெங்காரம் பேரையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 139 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கமலாபுரம் பாரதி மூலங்குடி ஓகைப் பேரையூர் புனவாசல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய குடும்ப பின்னணி கொண்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்தப் பள்ளியின் தமிழ் ஆங்கில இலக்கிய விழா மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்றது.இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த இலக்கிய விழாவில் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்கிற சங்க இலக்கிய  தமிழ் நாடகத்தையும் ஜூலியஸ் சீசர் என்கிற ஆங்கில நாடகத்தையும் அந்தப் பள்ளியைச் சேர்ந்த இருபதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் தத்துரூபமாக நடித்துக் காட்டினர்.குறிப்பாக தமிழ் நாடகமான சேரமான் கணைக்கால் இரும்பொறை நாடகம் முடிந்ததும் நாடகத்தில் நடித்த மாணவ மாணவிகள் அனைவரும் ஒரு சேர வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வெல்க செந்தமிழ் என்று முழக்கமிட்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    இந்த இரு நாடகங்களிலும் அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனான தேஜேஸ்வர் என்கிற மாணவன் கணைக்கால் இரும் பொறையாகவும் ஜூலியஸ் சீசர் ஆங்கில நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமாகவும் திறம்பட நடித்து அசத்தினான்.இதனையடுத்து மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர் சாரருஸ்ரீ இந்த பள்ளி மாணவர்களின் திறனை கண்டு வியப்பதாகவும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இங்கு நாடகம் நடத்திய மாணவர்களின் பேச்சுத் திறனாக இருக்கட்டும் உடல் மொழியாக  இருக்கட்டும் அதிலும் குறிப்பாக அந்தப் பையன் அழுது கொண்டே பேசுவதெல்லாம் மிகவும் அருமையாக செய்தான் என்று பாராட்டி பேசினார்.

    அப்போது ஆட்சியர் பேச்சை கேட்டு  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அப்பள்ளியின் ஆசிரியர் முருகானந்தம் உணர்ச்சி பெருத்தில் கண்ணீர் விட்டார்.தொடர்ந்து பேசிய ஆட்சியர் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். குறிப்பாக இந்த பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் ஆங்கிலம் என இரு மொழி சங்க இலக்கிய நாடகங்களிலும் தத்ரூபமாக வேடமிட்டு திறம்பட எந்த சொதப்பலும் இல்லாமல் நடித்தது காண்போரை ஆச்சரியப்பட வைத்தது.

    திருவாரூர் மாவட்ட செய்தியாளர் : இளவரசன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad