• சற்று முன்

    பேரணாம்பட்டு ஏரிக்குத்தி கிராமத்தில் வஃக்பு வாரியம் சார்பில் பட்டா மாற்ற தடை அறிவிப்பினால் பொதுமக்கள் வேதனை!!



    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, ஏரிக்குத்தி கிராமத்தில் வஃக்பு வாரியம் சார்பில் பட்டா மாறுதல் மற்றும் பத்திரப்பதிவுக்கு தடை விதிப்பு அறிவிப்பினால் அப்பகுதி மக்கள் பல வருடங்களாக வேதனை தெரிவிப்பதுடன் ஏரிக்குத்தி கிராமத்தில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து திங்கட்கிழமை நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவினை சமூக ஆர்வலரும், நுகர்வோர் நலன் பாதுகாப்பு சங்கத் தலைவருமான முகமது இம்ரான் தலைமையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் வரவேற்று நாற்காலியில் அமர வைத்து கனிவுடன் உரையாடி அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட அலுவலரை அழைத்து இதற்கு உண்டான விவரங்களை சேகரித்து எடுத்துவரக் கூறி, அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட வஃக்பு வாரியத்தில் தொடர்பு கொண்டு பேசி உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியில் முகமது.இம்ரான் மற்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு குறித்து மிகுந்த திருப்தியடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


    வேலூர் மாவட்ட செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad