Header Ads

  • சற்று முன்

    ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கல்!

    வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி திமுக 21 வது வார்டு வட்டக் கழகம் சார்பில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினார். இதை முன்னிட்டு  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 21 வது வார்டு வட்டக் கழக செயலாளர் வள்ளலார் ஆர். பி. ரமேஷ் தலைமை வகித்து தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி பொட்டலங்களை வழங்கி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்ட செய்தியாளர் : வாசுதேவன் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad