Header Ads

  • சற்று முன்

    கொல்லத்தில் திமுக அலுவலகம் திறப்பு விழா: சிவ பத்மநாதன் பங்கேற்பு!


    கேரள மாநிலம் , கொல்லம் மாவட்டம், ஆயுர் கிராமத்தில் திமுக அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும் திமுக தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 71ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கேரள மாநில அமைப்பாளர் கே. ஆர். முருகேசன்  தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் ரெசுராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு ரேணு ராஜன், ஏ.கே .நவாஸ், பி. கே .பாபு, பஸ்ஸிலுதீன், ஐயப்பன், ஷாலினி, ராணி, சசி ,ராஜேஷ் ,ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஜ்மல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    முன்னாள்  தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன்  கலந்துகொண்டு ஆயுர் திமுக அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    மேலும் கேரள மாநில அமைப்பாளர் கே .ஆர். முருகேசன் மற்றும் கிரிஷ் குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

     நிகழ்ச்சியில்  ஆயுர் கிளைக் கழக நிர்வாகிகள் டேனி ,கே. ஆண்டனி, டேனி கே. ராஜ்,  சுபின், பேபி ஆல்பீன், ஜோஸ், ஜோனு ,கே. ஜோஸ் தாஜுதீன், ஜோ மீ ,அணில் பி. ஜேம்ஸ் தாமஸ், தொட்டதில், ஜோபின் ஜாய், ஜோமன், தியா ஜிஜோ, ஆல்வியாஜியோ ,சினேகா சுபின், நேகாபிஜு, மீனா தாமஸ், உள்ளிட்ட உள்ளூர் நிர்வாகிகளும்,

    தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணை செயலாளர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை,  மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சி. முருகையா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஐயம்பெருமாள், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வன், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி தலைவர் செல்வகுமார் , ஆலங்குளம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் தங்க செல்வம், ஆலங்குளம் ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன், சத்யராஜ், அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், சுந்தரி மாரியப்பன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆம்பூர் கருணாநிதி, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சுரண்டை ஹக்கீம், சுரண்டை நகர இளைஞரணி அமைப்பாளர் கண்ணன், ராஜா, ஆலங்குளம் இளைஞர் அணி அரவிந்த், திலக், முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளர் தினேஷ், பாண்டியன், கீழக்கலங்கல்  ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், வழக்கறிஞரணி ஹரி கிருஷ்ணன் , இளைஞர் அணி நவீன், பிரபாகரன், ஏ.பி.என்.குணா , பூதத்தான், அருணா பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அலுவலகம் அமைத்த கொல்லம் மாவட்ட கமிட்டி நம்பர் சிஜோ டி. லால்  நன்றி கூறினார்.

    வேலூர் மாவட்ட செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad