ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அதிமுக ஒன்றிய சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அதிமுக ஒன்றிய சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் சு. ரவி, மாவட்ட அவைத் தலைவர் ஜி. சம்பத் , மாவட்ட பொருளாளர் ராமு ஆகியோர் கலந்துகொண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் , போதைக்கு இளைஞர் மற்றும் மாணவர்கள் அடிமையாகி உள்ளதாகவும் , கஞ்சா மட்டும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தவறி விடியா திமுக அரசை கண்டித்து கண்டனகோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன், மற்றும் காவிரிப்பாக்கம் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து :ஆர்.சுரேஷ்
கருத்துகள் இல்லை