குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

மகளிர் உரிமைத்தகையை குறித்து கொச்சையாக பேசிய பாஜக பெண் நிர்வாகி நடிகை குஷ்புவை கண்டித்து மகளிர் தொண்டர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மகளிர் உரிமைத்தகையை குறித்து கொச்சையாக பேசிய பாஜக பெண் நிர்வாகி நடிகை குஷ்புவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்புவை கண்டித்து கட்டண கோஷங்களும் பின்னர் அவர் உருவ படத்திற்கு செருப்பால் அடித்து வன்மையாக கண்டிக்கும் வகையில் கண்டன கோஷங்கள் ஏற்படுத்தி குஷ்புவின் படத்தினை தீ வைத்து எரித்தனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் அணிகள் பங்கேற்றனர். இந்த கண்டன கோஷத்தில் மகளிரின் நலனை கருதி தமிழக முதல்வர் ஏற்படுத்திய நல்ல திட்டங்களை எப்படி கொச்சையாக பேசலாம் நடிகை குஷ்பூ ராணிப்பேட்டை மாவட்ட திமுக அணியின் சார்பாக அவரை வன்மையாக கண்டிப்பதோடு இது போன்ற அவதூறுகளை பரப்பினால் சர்ச்சைக்கு ஆளாவார் என்று கோஷங்களை எழுப்பினர்

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி  தலைமையில் நடைபெற்றது இதில் திமுக மகளிர மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து :ஆர்.சுரேஷ்

கருத்துரையிடுக

புதியது பழையவை