அப்போலோ மருத்துவமனை சார்பில் காஞ்சிபுரத்தில் எலும்பு மூட்டு சிகிச்சை முகாம். எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குணால் பட்டேல் தலைமையில் நடைபெற்றது.
ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமமான அப்போலோ மருத்துவமனை சார்பில் புதியதாக தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் காஞ்சிபுரத்தில் துவக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் துவக்கப்பட்டுள்ள அப்போலோ தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் சார்பில் எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ சிகிச்சை முகாமில் அப்போலோ மருத்துவமனையின் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் குணால் பட்டேல் கலந்துகொண்டு எலும்பு நோய் சம்பந்தமாக சிகிச்சை பெற வந்த பொது மக்களுக்கு, எலும்பு மூட்டு தேய்மானம் குறித்தும், நோய் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் உணவு முறைகள் குறித்தும் எடுத்துக் கூறி சிறப்பு உரையாற்றி நோயாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தார். மருத்துவ முகாமில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட எலும்பு சம்பந்தமான நோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
செய்தியாளர் : தினேஷ்
கருத்துகள் இல்லை