Header Ads

  • சற்று முன்

    ஏ ஐ டி யு சி பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது நூறாவது நாள் இன்று தலைகீழாக நின்று போராட்டம் நடைபெற்று வருகிறது


    ஏ ஐ டி யு சி பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது நூறாவது நாள் இன்று தலைகீழாக நின்று போராட்டம் நடைபெற்று வருகிறது 15.3.2024. வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் ராஜீவ் காந்தி சிக்னல் அருகில், ஈசிஆர் சாலை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகம் அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அன்புடையீர் வணக்கம்

    பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு  நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் நிறுவனத்தைஸ செயல்பாட்டுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஏஐடியூசி தலைமையில்   தொடர்ந்து  பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தி வந்தார்கள்.

    இப்போராட்டத்தின் விளைவாக 30.9.2022 அன்று அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் குடிமைப் பொருள் வழங்கல் துறை செயலர் உதயகுமார் உடன் இருந்தார். ஏஐடியூசி தொழிற்சங்க தலைவர்கள் , மற்றும் ஊழியர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில் அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது, இரண்டு மாதங்களுக்குள் பாப்ஸ்கோ நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதென்றும், ஊழியர்கள் ஊதியம் பட்டுவாடா செய்வது, அனைத்து கடன்களையும் தீர்ப்பது என அமைச்சர் அவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார். இதனை ஏற்று ஊழியர்களின் தொடர் போராட்டம்  விலக்கிக் கொள்ளப்பட்டது.

    அமைச்சர் அவர்கள் உறுதி அளித்து பலமாதங்கள் கடந்தும்  பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, நிலுவை ஊதியம் வழங்குவது, நிலுவையில் உள்ள கடனை அடைப்பது போன்றவைகள் நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து  கோரிக்கையை வலியுறுத்தி, வயிற்றில் ஈரத்துணி அணிந்து கொண்டும், தலைகீழாக நின்றும், உயிரை பணயம் வைத்து கடலில் இறங்கியும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தப்பட்டது,  தொடர்ந்து துறையின் அமைச்சர் சாய் சரவண குமார், முதலமைச்சரையும் பலமுறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.  இந்த பேச்சுவார்த்தையின் பொழுது முதலமைச்சர் அவர்கள் ஐந்து பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது கமிட்டி முடிவு வந்த பிறகு, பாப்ஸகோ சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். ஐந்து பேர் கொண்ட கமிட்டி கூடி முடிவெடுத்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பற்ற முறையில் முரண்பாடான கருத்துக்களை கூறி பாப்ஸ்கோ ஊழியர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வருகிறார்கள். தேர்தலின் போது முதலமைச்சர் அவர்கள் பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து நடத்தி ஊழியர்களின் நிலுவை சம்பளம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்  வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அமைச்சர் அவர்கள் சங்கத்தோடு நடந்த பேச்சு வார்த்தையில் இரண்டு மாதத்தில் பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து நடத்தப்படும் நிலுவை சம்பளம்  கொடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை , இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி  ஏஐடியூசி தொழிற்சங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    இப்போராட்டத்திற்கு பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் ரமேஷ் , செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் K.சேதுசெல்வம், மாநில தலைவர் I.தினேஷ் பொன்னையா, மாநில கவுரவத் தலைவர் V.S.அபிஷேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஏ ஐ டி யூ சி மாநில பொருளாளர் R.அந்தோணி பாப்ஸ்கோ சங்க நிர்வாகிகள் துணை தலைவர்கள்,  V.அமுதவல்லி, பத்மநாபன் R.ரவி, M.ஏழுமலை, S.முருகவேல், M.வேலு, R.பாலமுருகன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் S.ஜீவரத்தினம், S.ராஜு, P.விசுவநாதன், T.குமரகுரு, K.அமுதா, C.அம்சவல்லி, P.நக்கீரன், K.சத்தியசீலன் மற்றும் ஊழியர்கள்     தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

    கோரிக்கைகள்

    பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலவையில் உள்ள 75 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அனைத்து ஊழியர்களுக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிட வேண்டும்.

    செய்தியாளர் : வாசுதேவன் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad