வாணியம்பாடியில் நியூ டவுன் ரயில்வே கேட் மேம்பாலம் கட்டித்தர கோரிக்கை வைத்து கடையடைப்பு
தொழில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்றது. திமுக ஆட்சியைப் பிடிக்க வாக்குறுதிகளை அள்ளித் தரும் ஆனால் அத்தனையும் செயல்களில் இருக்காது என சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேச்சு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நியூ டவுன் ரயில்வே கேட் உள்ளது.அரசு மருத்துவமனை,தாலுகா ஆபிஸ்,ரிஜிஸ்டர் ஆபிஸ்,நீதிமன்ற வளாகம்,அனைத்து காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இந்த நிலையில் இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.மேலும் பழுது ஏற்படுகிறது.இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்களின் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கையாக உள்ளது வாணியம்பாடி தொகுதி
மக்களின் நீண்ட ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வாணியம்பாடி தொழில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முழு கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், திருப்பத்தூர் மாவட்ட மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன், மண்டல தலைவர் கிருஷ்ணன், தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டார் அவர் பத்திரிகையாளர் சந்தித்து பேசும்போது, இந்த ரயில்வே மேம்பாலத்தின் உண்மை நிலையை, இந்த அரசாங்கம் மக்கள் இடையே வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும் என்றும், தேர்தல் சமயத்தில் மட்டுமே வாணியம்பாடியின் நீண்டகால மக்கள் பிரச்சனை கையில் எடுப்பதும், வெற்றி பெற்றவுடன் இந்தப் பிரச்சினையை கண்டுக்காமல் கடப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ஆளுங்கட்சியின் மீது காட்டமாக சாடினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 26 சங்கங்களும், 20க்கும் மேற்பட்ட அமைப்புகளும் மற்றும் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர். ந.வெங்கட்
கருத்துகள் இல்லை