Header Ads

  • சற்று முன்

    வாணியம்பாடி அருகே இரண்டு கிராமங்களில் நடைப்பெற்ற எருது விடும் விழா கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்.

    திருப்பத்தூர் மாவட்டம்,  வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில்  இன்று எருது விடும் விழா நடைப்பெற்றது,

    இந்த எருது விடும் விழாவில்   ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆந்திர மாநிலம், குப்பம், போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் எருது விடும் விழாவில் பங்கேற்றன.‌

    இந்த எருது விடும் விழாவை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், வாணியம்பாடி கோட்டாச்சியர் பிரேமலதா ஆகியோர் உறுதி மொழி ஏற்று எருது விடும் விழாவை கொடியசைத்து துவக்கி வைத்தனர். கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்கு பின்னர் வாடி வாசல் வழியாக காளைகள்  அவிழ்த்து விடப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை குறைந்த மணி துளிகளில் கடந்த காளைக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 71 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாய் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த எருது விடும் விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து 5000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் இதே போல் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியிலும் எருது விடும் விழா நடைப்பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

    திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்‌. ந.வெங்கட்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad