Header Ads

  • சற்று முன்

    நாட்றம்பள்ளி அருகே விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ நிறைவேற்றினார்


    நாட்றம்பள்ளி அருகே விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வெலக்கல்நத்தம் பகுதியில் இருந்து சென்னை கோயம்பேடு வரை புதியதாக அரசு பேருந்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மற்றும் எம்எல்ஏ தேவராஜ் ஆகியோர் கொடியசைத்து  துவக்கி வைத்தனர் இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி

    திரும்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் மற்றும்  வீரானூர், குனிச்சூர் சின்ன கவுண்டனூர், மம்தாபுரம், நந்தி பெண்டா, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. இந்த குக்கிராமங்களில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    மேலும் இந்த குக்கிராமத்தில் வசிக்கும் கிராமமக்கள் 5000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாயம் நிலம் வைத்து கொண்டு பெரும்பாலான கிராமமக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவசாயம் செய்து விளையக்கூடிய காய்கறிகள் ,கீரைகள் உள்ளிட்டவைகளை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எடுத்து செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லை எனவும் மேலும் பேருந்து வசதி செய்து தரக்கோரியும் அப்பகுதி விவசாயிகள் பலமுறை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோரிடம் கோரிக்கை வைத்து வந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று வெலக்கல்நத்தம் பகுதியில் இருந்து சென்னை கோயம்பேடு பகுதிக்கு செல்வதற்கு புதியதாக  அரசு பேருந்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

    இந்த பேருந்து தினமும் வீடியற்காலை 4 மணி அளவில் வெலக்கல்நத்தம் பகுதியிலிருந்து  புறப்பட்டு சென்னை கோயம்பேடு வரை இயக்கப்பட்டுள்ளது. மேலும் புதியதாக அரசு பேருந்து இயக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வின் போது போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.


    திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்‌. ந.வெங்கட்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad