• சற்று முன்

    நாட்றம்பள்ளி அருகே நூதன முறையில் செல்போன் மூலம் பணம் அனுப்ப சொல்லி நூதன திருட்டு-நாட்றம்பள்ளிபோலீசார் விசாரணை


    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வாலூர் பகுதியில் சேர்ந்த தசரதன் (35) இவர்  வெலக்கல்நத்தம் பகுதியில் செல்போன் சர்வீஸ் மற்றும் சேல்ஸ் கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் இன்று மாலை மர்ம நபர்கள் இருவர் பைக்கில் வந்து செல்போன் மூலம் பணம் ₹ 20ஆயிரம் அனுப்ப வேண்டும் என்றும்  கையில் பணம் தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய கடை உரிமையாளர் அவர் கொடுத்த செல்போன் நம்பருக்கு 20 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார்.


    பின்னர் அவரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டபோது ஏடிஎம் கார்டு மூலம் அருகே உள்ள ஏடிஎம்மில் எடுத்து வருவதாக கூறிவிட்டு அவருடன் வந்த நபரை கடை அருகில் உட்கார வைத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மர்ம நபருடன் வந்த நபரும் அங்கிருந்து நான் அவரை பார்த்து வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் கூச்சலிட்டு அங்கிருந்த தப்ப முயன்றவரை பிடித்து  உட்கார வைத்துள்ளனர்.

    பின்னர் அவரிடம் விசாரித்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் சேர்ந்த ஜெயபால் (47) டைலர் வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் உடன்  வந்த நபர் குறித்து விசாரித்த போது அவர் பர்கூர் பகுதியை சேர்ந்தவர் என்றும்  500 ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு வந்ததாக தெரிவித்தார்.  இந்நிலையில் கடை உரிமையாளர் உடனடியாக வங்கிக்கு சென்று மர்ம நபர் கொடுத்த செல்போன் நம்பரை வைத்து வங்கி கணக்கை பார்த்த போது அதில் இருந்து 20000 ரூபாய் மும்பையில் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்தது தெரிய வந்தது. நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட நபருடன் வந்தவரை  பொதுமக்கள் நாட்றம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய மர்ம நபர் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றது.

    இந்த பகுதிகளில் நடக்கும் திருட்டை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். நுதன திருட்டால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad