திருப்பத்தூரில் அலங்காயம் வட்டார கிளையின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்டது
சென்னையில் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் துயர் துடைக்கும் பொருட்டு திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலங்காயம் வட்டார கிளையின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் குடிநீர், அரிசி, போர்வைகள், பால் பவுடர், என சுமார் 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதிமிடம் ஒப்படைத்தனர். மாவட்ட தலைவர் பாபு, மாவட்ட செயலாளர் ஞானசேகரன், வட்டார செயலர் நடராசன், பொருளாளர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர். ந.வெங்கட்
கருத்துகள் இல்லை