ஏலகிரிமலையில் 300 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி சான்று!. சாரண சாரணிய இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை கொத்தனூர் பகுதியில் உள்ள தனியார் வளாகத்தில் மத்திய அரசு அங்கீகாரத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹிந்துஸ்தான் சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பாக மூன்று நாட்கள் முகாம் நடைபெற்றது.
இந்த சாரண சாரணியர் முகாமில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒழுக்கம், நேரம் தவறாமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசப்பற்று உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் நிறைவு விழாவில் கலந்துகொண்ட ஏலகிரிமலை காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன், ஹிந்துஸ்தான் சாரண சாரணியர் அசோசியேஷனின் மாநில துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், மாநில செயலாளர் அரவிந்தன், மாநில அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் மரங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன, எரிக்கப்படுகின்றன எனவே அனைவரும் மரக்கன்றுகளை கட்டாயமாக நடுங்கள் என்று கோரிக்கை வைத்து பின்னர் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி முடித்ததற்கான சான்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் : ந.வெங்கட்
கருத்துகள் இல்லை