• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் ஸ்ருதி, இ.கா.ப அவர்கள் தலைமையில் சான்றிதழ்களை வழங்கினார்கள்.



    ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர்.M,S. முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் ஸ்ருதி, இ.கா.ப அவர்கள் தலைமையில் மற்றும் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமரைப்பாக்கம் மற்றும் அவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரன்பாளையம் சத்திரம் ஆகிய இடங்களில் புதிய சோதனைச் சாவடியை திறத்து வைத்தனர். மேலும்



    மாவட்ட முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தானியங்கி படப்பிடிப்பு கேமராக்கள் (ANPR-Camera) 1)தாமரைப்பாக்கம் சோதனைச் சாவடி-2  2) சீக்கராஜாபுரம் சோதனைச் சாவடி-2,  3)அரும்பாக்கம் சோதனைச் சாவடி-2, 4) ரெட்டைகுளம் சோதனைச் சாவடி-2, 5)புதுகேசவபுரம் சோதனைச் சாவடி-2, 6) பள்ணூர் சோதனைச் சாவடி-2, 7)பிள்ளஞ்சி சோதனைச் சாவடி-2 8) பொன்னியம்மன் பட்டரை சோதனைச் சாவடி-2 9)சில்வர்பேட்டை சோதனைச் சாவடி-2 என மொத்தம் 9 சோதனைச் சாவடிகனுக்கு 18 கேமராக்களை பொருத்தப்பட்டு அதனை கண்காணிப்பதற்காக, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்தார்.

    மேலும் கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி (ஆற்காடு நகர வட்டம்), சாலமன்ராஜா (ஆற்காடு கிராமிய வட்டம்), பழனிவேல் (அரக்கோணம் கிராமிய வட்டம்) மற்றும் பாரதி (அரக்கோணம் நகர காவல் நிலையம்), உதவி ஆய்வாளர்கள் தமிழ்செல்வி (ஆற்காடு நகர காவல் நிலையம்), வரலட்சுமி (அனைத்து மகளிர் காவல் நிலையம் அரக்கோணம்) மற்றும் நாராயணசாமி (அரக்கோணம் கிராமிய காவல் நிலையம்), சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகுமார் (சோளிங்கர் காவல் நிலையம்), தலைமை காவலர்கள்  கெஜலட்சுமி (இராணிப்பேட்டை காவல் நிலையம்), வசந்தி (ஆற்காடு நகர காவல் நிலையம்), காமாட்சி (வாழைப்பந்தல் காவல் நிலையம்),மாலதி (அனைத்து மகளிர் காவல் நிலையம் அரக்கோணம்),தேவன் (தக்கோலம் காவல் நிலையம்) மற்றும் மதன்குமார் (அவலூர் காவல் நிலையம்), முதல்நிலை காவலர் ஜாவித்கான்

    (வாலாஜா காவல் நிலையம்) ஆகியோர்களை பாராட்டி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். M,S.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசுவேசுவரய்யா (தலைமையிடம்), துணை காவல் கண்காணிப்பாளர்கள் இரவிச்சந்திரன் (மாவட்ட குற்றப்பிரிவு பொறுப்பு அரக்கோணம் உட்கோட்டம்) காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


     சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad