• சற்று முன்

    திருப்பத்தூரில் WCWR புதிய அலுவலகம் திறப்பு விழா


    பெண்கள் உரிமைகளுக்கான உலக பேரவை (WCWR) யின் புதிய அலுவலகம் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் பின்புறமுள்ள MM நகரில்  05.11.2023 ஞாயிறு அன்று அமைப்பின் நிறுவனரும் தேசிய தலைவருமான திரு. R. செல்வகணேசன் M.C.A. அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்களின் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

    USIP மாநில தலைவி A. ஜெயந்தி அவர்கள் முன்னிலை வகிக்க மாவட்டத்தலைவி A. கலைவாணி அவர்களின் தலைமையில் மாவட்ட பொருப்பாளர்களான T. அமலா செல்வராஜன் , M. கலைமணி, D. கலைச்செல்வி ஆகியோரின் மேற்பார்வையில் சிறப்பு விருந்தினர்களாக பங்குதந்தை Rev. Fr. V. கிளமென்ட் ஆண்டனி அவர்களின் ஆசியுடன் குடும்ப நல ஆலோசகர் M. அருள்தாஸ், மற்றும் திருப்பத்தூர் காவல் உதவி ஆய்வாளர் A. ராணி அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 

    மாநில விவசாய அணி (AIFA) செயலாளர் A. நவ்லக், USIP கட்சியின் திருப்பத்தூர்  நகராட்சி தலைவர் T.விக்னேஷ், *IHRSJC, USIP  பொருப்பாளர்கள் என திருப்பத்தூர் மற்றும் வேலூரிலிருந்து வந்து பரவலாக கலந்துகொண்டனர். தொடர்ந்து P. அருணகிரி LIC அவர்கள் செயல்பாடுகள் பற்றி விவரித்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியைத்தெரிவித்தார். )  

    திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் வெங்கட் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad