அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் இல்லத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பூத் கமிட்டி பொறுப்பாளர் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். முன்னதாக அதிமுக கொடி சின்னம் லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை வரவேற்கும் வகையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் :அதிமுக கட்சியின் உச்ச பட்ச அமைப்பு பொது குழு தான் பொது குழு உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றபட்டு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரித்து உள்ளது.
அதிமுக கட்சி சின்னம், கொடி ,லெட்டர் பேடு உள்ளிட்டவை தொடர்பாக உயர் நீதிமன்றம் இன்று சிறப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது..திரும்ப திரும்ப இந்த விவகாரத்தை நீதி மன்றத்திற்கு கொண்டு வராதீர்கள் என்று ஒ.பி.எஸ் க்கு உயர்நீதிமன்றம் சாட்டையடியாக ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. திமுக அமைச்சர் எ.வ.வேலு இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருவது..உப்பு தின்னவர்கள் தன்னை குடித்து தான் ஆக வேண்டும் என்றால் அவர்.
கருத்துகள் இல்லை