திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம்
திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் - நடைப்பயிற்ச்சியை காணொளி காட்சி மூலம் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் - நடைப்பயிற்ச்சியை விளையாட்டு மும்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபயிற்சியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்த நடைப்பயிற்சியானது ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி பாய்ச்சல் வழியாக சென்று மீண்டும் திருப்பத்தூரை வந்தடையும். சுமார் 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த நடைப்பயிற்ச்சியில், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் செந்தில், திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் சிவக்குமார், அலங்காயம் மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் சமூக ஆர்வலர்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நடைப்பயிற்சியின் முக்கிய துவத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் நொயற்ற வாழவும், ஆரோககியத்தை மேம்படுத்த வேண்டும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் நிருபர் வி வெங்கட்
கருத்துகள் இல்லை