மூடப்பட்டது டாஸ்மாக் கடை 57... போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...
சென்னை மாநகராட்சி 42வது வார்டுக்கு உட்பட்ட மேயர் பாசுதேவ் தெருவில் மதுக்கடை 57 செயல்பட்டு வந்தது...இந்த கடையின் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகராய கலை கல்லூரி,பேருந்து நிறுத்தம்,நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன...
ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெண்கள் பொது மக்கள் செல்லக்கூடிய பிரதான வழியாக உள்ளது.. இந்த நிலையில் மதுக்கடையில் மது வாங்குவோர் இந்த பாதையை மறைத்து அமர்ந்து கொண்டு மதுக்குடிப்பது,காது கொடுத்து கேட்க முடியாத அசிங்கமான வார்த்தைகளால் பேசுவது,குடித்து விட்டு தன்னிலை அறியாமல் அரைகுறை ஆடையுடன் அசிங்கமாக படுத்து கிடப்பது உட்பட பல இழிவு செயல்கள் நடைபெற்று வந்தது...
இந்த இழிவு நடவடிக்கையால் தெரு வழியாக பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் கதவு நிரந்தரமாக மூடப்பட்டது... இதனால் மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பள்ளி செல்ல வேண்டிய அவலம் தொடர்ந்தது...
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நமது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் மோ.ரேணுகா B E.,MC., அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தார்...இருப்பினும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் தொடர்ந்ததால் NFIW AISF AIYF சார்பாக மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று திட்டமிட்டு கடந்த 26.10.2023 அன்று நடந்தது...
அதில் ஆர்வமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெண்கள் பொது மக்கள் பங்கேற்றனர்.அந்த கையெழுத்து படிவங்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.அப்போது 10 நாட்களுக்குள் கடை அடைப்பதாக வாக்குறுதி அளித்தனர்... அதன்படி 31.10.2023 அன்று மதுக்கடை 57 நிரந்தரமாக மூடப்பட்டது... தொடர் முயற்சிக்கு, போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி... இதை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி....
கருத்துகள் இல்லை