• சற்று முன்

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த கொடூரம்- குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்



    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை, புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜி.  இவருடைய மகன் கோவிந்தராஜி (41). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு காளீஸ்வரி (29) என்ற மனைவியும்,  இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்தவன் 8-ம்வகுப்பும், இளைய மகன் 6-ம் வகுப்பும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கணவர் வேலைக்கு சென்ற பிறகு அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கோவிந்தராஜ்(36) என்பவருடன் பேசி பழகி வந்துள்ளார்.நாளடைவில் இது கள்ளகாதலாக மாறி கடந்த 5ஆண்டுகளாக  இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.‌ இதை அறிந்த கணவர் கோவிந்தராஜ் மனைவியை‌ பலமுறை  கண்டித்துள்ளார்.  இதை விட மனமில்லாத காளீஸ்வரி தனது கள்ள காதலனுக்கு தெரிவித்தார்.  



    நேற்று இரவு கணவர் கோவிந்தராஜியை கள்ளகாதலன் கோவிந்தராஜ் மது அருந்துவதற்காக செந்தாமரை என்பவரது நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.  மது போதையின் உச்சத்தில்  இருந்ததால் கள்ளகாதலன் கோவிந்தராஜ் கள்ளகாதலி காளீஸ்வரியை தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். பின்பக்கமாக வந்த மனைவி கல்லால் தலையில் அடித்துள்ளார். மயங்கி கீழே விழுந்தவரை மீண்டும் கல்லால் அடித்துள்ளனர். பிழைத்துக்கொள்வார் என எண்ணியவர்கள் அருகில் இருந்த மண்வெட்டியால் சரமாரியாக தலையில்  வெட்டியுள்ளனர்.  ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலிலேயே துடிதுடித்து இறந்தார்.  மேலும் நிலத்தின் உரிமையாளர் பணிக்கு வந்தவர் கோவிந்தராஜின் உடலை பார்த்து பயந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். 

    தகவல் அறிந்து வந்த மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் குற்றவாளிகளை‌ பிடிக்க உத்திரவிட்டார். 

    அதனை தொடர்ந்து திருப்பத்தூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில் தலையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மனைவி காளீஸ்வரியுடன் கள்ளகாதலன் தான் மண் வெட்டியால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். உடலை மீட்டு ஏலகிரி மலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மனைவியே கள்ளகாதலனுடன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    திருப்பத்தூர் மாவட்ட நிருபர் வெங்கட் 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad