தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது மத்திய அரசு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் எல்.சி.மணி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது கடந்த ஆண்டுகளில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது விவசாயிகளுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட இஸ் கிரிக் நாளிதழ் மீது வழக்கு மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கும் மத்திய அரசின் செயலை கண்டிப்பதாகவும் மேலும் போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்..
மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியமான தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 2696 கோடி ரூபாயினை மத்திய அரசு வருகின்ற தீபாவளிக்கு முன்பாக தமிழக அரசிடம் வழங்கி அனைவருக்கும் ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் மாபெரும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..
கருத்துகள் இல்லை