• சற்று முன்

    இருசக்கர வாகன பேரணியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கொடியசைத்து அனுப்பி வைத்தார்


    திருப்பத்தூரில் நீட் தேர்வு விளக்க கோரியும் 2 வது இளைஞர் அணி மாநாடு நடக்கவிருப்பதை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும்  இருசக்கர வாகன பேரணியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்  கொடியசைத்து அனுப்பி வைத்தார்.



    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியில் நீட் தேர்வுவிளக்க கோரியும் வருகின்ற 17 தேதி இளைஞர் அணி மாநில மாநாடு நடக்கவிருப்பதை ஒட்டியும் சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரியில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 85 ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்ல இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

    இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களை கடந்து இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் நகர செயலாளர்  ராஜேந்திரன் உற்சாகத்தோடு வரவேற்றனர்.‌ 

    பின்னர் அவர்களுக்கு  மரியாதை செய்து இதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டம் செல்ல இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து அனுப்பி வைத்தார்  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், மற்றும்‌ ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.


    திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் : வெங்கட் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad