Header Ads

  • சற்று முன்

    கலவை அருகே பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆர் காந்தி 4 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்..


    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் இந்திரா நகர் பகுதியில் கடந்த 12 ஆம் தேதி விக்னேஷ் என்பவர் தனது தம்பியின் நான்கு வயது மகளான நவிஷ்காவை தூக்கி வைத்துக் கொண்டு பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பொழுது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு வயதான நவிஷ்கா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நவிஷ்காவை தூக்கி வைத்திருந்து பட்டாசு வெடித்த விக்னேஷ் இடது கையில் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியான நவிஷ்காவின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாயும் காயமடைந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் நேற்று மாலை அறிவுப்பினை வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து இன்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்,காந்தி மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன் ஆகியோர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு நேரடியாக சென்று உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்திற்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரான ரமேஷ் - அஸ்வினி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும்  முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட மூன்று லட்ச ரூபாய் நிதியினை காசோலையாக வழங்கினர்.மேலும் காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 1 லட்ச ரூபாய்க்கான காசோலையானது அவரது தாயர் சுமதியிடம் வழங்கினார். மேலும் அமைச்சர் ஆர் காந்தி தனது சொந்த பணத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

    இந்த நிகழ்வில், சமூகநலத் பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஸ்ரீவள்ளி, வட்டாட்சியர் இந்துமதி, ஒன்றிய குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன்,  ஒன்றிய குழு உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர், அவைத் தலைவர், மாவட்ட பிரதிநிதி,ஊராட்சி மன்ற தலைவர் , ஒன்று துணை செயலாளர், பேருராட்சி நகர செயலாளர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர், திமுக கிளை கழக செயலாளர்  உட்பட பலர் கலந்து கொண்டனர் 


    சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad