• சற்று முன்

    கிறிஸ்மஸ் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்ட கேக் தயாரிப்பு


    புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஐரோப்பிய பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுவதற்காக உலர் பழங்கள், மதுபானங்கள் கலவைகொண்டு தயாராகும் 150 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக். மதுரையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் அமிக்காவில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐரோப்பிய பரம்பரிய முறையிலான அறுவடைத் திருவிழாவில் கொண்டாடப்படுவதை போல தயாரிக்கப்படும் கேக் நவீன முறையில் பாரம்பரிய சுவையில் அமைக்க ஹோட்டலில் விருந்தினர்கள் முன்னிலையில் தயார் செய்யப்பட்டது.



    முந்திரி, பாதாம், பிஸ்தா, செர்ரி கிஸ்மிஸ், வால்நட் மற்றும் உயர்ரக மதுபானங்களான ரம், ஜின், ஒயின், ஸ்காட்ச், பிராந்தி, விஸ்கி கொண்ட காக்டெய்ல் கலவையில் கலப்பதற்காக மேடையில் 50 கிலோ எடையில் உலர் பழங்கள் மற்றும் கிறிஸ்மஸ் கொண்டாடப்படும் விதமாக மான் மற்றும் கிறிமஸ் தாத்தா படம் அலங்கரிக்கப்பட்டு அதில் போட்டியாளர்கள் பங்குபெறும் வகையில் 24 நாணயங்கள் மறைத்து வைக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து உலர் பழங்கள் ஒன்றாக்கப்பட்டு மதுபானங்கள் கலக்கப்பட்டது.  பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ், சிக்கந்தர் மற்றும் விடுதி ஊழியர்கள் கலந்து கொண்டு உலர் பழங்கள் கொண்ட கலவையை தயார் செய்தனர். பின்னர் அவற்றை மொத்தமாக சேகரித்து 40 நாட்கள் காற்று புகாத வண்ணம் பக்குவப்படுத்தப்பட்டு.

    பின்னர் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கேக் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஐரோப்பிய  பாரம்பரிய முறையில் தயாராகும் இந்த உயர்ரக கேக் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயார் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


    செய்தியாளர் வி காளமேகம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad