சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் வேலூர் கோட்டை - சமூக விரோதிகளிடமிருந்து மீட்குமா ? வேலூர் கோட்டையை....
வட ஆற்காடு மாவட்டம் வேலூர் புகழ் பெற்ற கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயில் என்று சிறப்பு வாய்ந்த சின்னங்கள் திகழ்ந்திருந்த காலம் போய், தற்போது பராமரிப்பில்லாமல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை கட்டிடங்கள் சிதலமடைந்து வருகின்றன. கோட்டையை நூல் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அலுவலகம் இருந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. வேலூர் கோட்டையில் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. இது மக்கள் மத்தியில் பெரும் வேதனையாக இருக்கிறது. அரசு அலுவலகங்கள் கோட்டையில் இயங்கி வந்த காலத்தில் பராமரிப்பு நன்றாக இருந்தது. தற்போது அரசு அலுவலகங்கள் அனைத்தும் வேலூர் சுற்றியுள்ள இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டதால் அங்கு இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் கட்டிடங்கள் சிதலமடைந்து காணப்படுகிறது. கஞ்சா விற்பனையும் கஞ்சா போதையில் இருப்பவர்களும் கோட்டையினுள் அதிகரித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கோட்டையில் செல்வதற்கு அஞ்சுகின்றனர் காதலர்கள் பூங்காவாக மாறி வருகிறது பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் குடிப்பதற்கு பாராக பயன்படுத்துவது மக்கள் மனதில் மிகவும் வேதனையோடு கண்கள் ரத்தக்கண்ணீர் வருகிறது புகழ் பெற்ற கோட்டையின் அரசு கட்டிடங்களாக இயங்கி வந்த காலத்தில் நன்றாக இருந்ததாகவும் தற்போது பராமரிப்பு இல்லாமல் சுற்றுலா பயணிகள் வருவதற்கே அச்சப்படுகின்றனர். இனியாவது சுற்றுலா பயணிகள் அச்சம் இல்லாமல் வருவதற்கும் சமூக விரோதின் கூடாரமாக திகழும் வேலூர் கோட்டை மீண்டும் சரி செய்யுமா என்று வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து மக்களும் எதிர்பார்க்கின்றனர்
கருத்துகள் இல்லை