• சற்று முன்

    வாலாஜா வட்டாரத்தில் தோட்டக்கலை துறை சார்பில் கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழமர தொகுப்பு விநியோகம்



    கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீடுதோறும் ஐந்து வகை பழமர கன்றுகள் விநியோகம் செய்திடும் பணிகள் தற்போது வாலாஜா வட்டாரத்தில் குடிமல்லூர் பஞ்சாயத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் அஞ்சலை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் மூ.பசுபதிராஜ் அவர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பழகன்றுகளை விநியோகம் செய்து பழகன்றுகளை நன்றாக பராமரிக்கும்படி பஞ்சாயத்து தலைவர் கேட்டுகொண்டார். 

    இத்திட்டம் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் மூ.பசுபதிராஜ் அவர்கள் கூறுகையில் இந்த நிதியாண்டில் கீழ் வாலாஜா வட்டாரத்தில் கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சயத்துகளான முகுந்தராயபுரம், மாந்தாங்கள், சுமைதாங்கி, பூண்டி, தகரகுப்பம், திருமளைச்சேரி, குடிமல்லூர் உள்ளிட்ட 7 பஞ்சாயத்துகளில் இப்பழ தொகுப்பை பெறவிரும்புவர்கள் ரூ. 50 பங்களிப்பு தொகையாக செலுத்தி அரசாங்கம் கொடுக்கும் ரூ.150 மானியத்தில் பலா, கொய்யா, எலுமிச்சை நெல்லிமற்றும் சீத்தா உள்ளிட்ட பழமரகன்றுகள் பெற்றுகொள்ளலாம் என்று தெரிவித்தார். மேற்கண்ட பஞ்சாயத்துக்கு உட்பட்ட பயனாளிகள் தங்கள் ஆதார் கொண்டு உழவன் செயலியில் முன்பதிவு செய்தும் பெற்றுக்கொள்ளலாம் .

    மேலும் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற www.tnhorticulture.tn.gov.in/kit new/இணையதளதில் பதிவு செய்யகேட்டுக்கொண்டார். தோட்டகலை உதவி அலுவலர்கள் சுந்தரி மற்றும் அன்பரசுஆகியவர்கள் நிகழ்ச்சினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் 

    சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad