• சற்று முன்

    வாணியம்பாடி அருகே 1 லிட்டர் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரிகறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


    வாணியம்பாடி அருகே  1 லிட்டர் ஆவின் பால் கொள்முதல் விலையை 10 ரூபாயாக  உயர்த்தக்கோரி ஆவின் குளிரூட்டும்  மையம் முன்பு கறவை மாடுகளுடன்  பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

    திருப்பத்தூர் மாவட்டம்.வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள ஆவின் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம்    முன்பு 1 லிட்டர் கறவை மாட்டின் பாலை  30 ரூபாயிற்கு  ஆவின் கொள்முதல் செய்து கொள்வதாகவும்,கறவை மாட்டிற்கு வழங்கப்படும் தீவனங்களின் விலை அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனால் பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகி தங்களது சொந்த செலவில் பாலை உற்பத்தி செய்து அதை மிக குறைந்த விலையில் ஆவின் பால் கொள்முதல் நிலையத்திற்கு வழங்குவதாகவும்பிற தனியார் பால் கொள்முதல் நிலையங்களில் 1 லிட்டர் பால் 40 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை கொள்முதல் செய்து வருவதாகவும், அரசு நடத்தும் ஆவின் பால் கொள்முதல் நிலையங்களில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டும்  1 லிட்டர்  பசும் பாலின்  விலையை 10 ரூபாய் உயர்த்தி 40 ரூபாயகவும் எருமை பாலின் விலையை 1 லிட்டருக்கு 55 ஆக உயர்த்தி  கொடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை வைத்து கறவை மாடுகளுடன்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள், மற்றும் விவசாயிகள் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

    செய்தியாளர் : ஜே.ஆர்.சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad