ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி கள்ளியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சி கள்ளியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 38 பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந் நிலையில் சீரமைக்கப்பட்ட விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி இரண்டு பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்பு பள்ளி திறந்து பார்த்தபோது பள்ளி கட்டிடத்தில் மேற்கூறையின் சிமெண்ட் பூச்சி பெயர்ந்து கீழே விழுந்து உள்ளது. மேலும் பள்ளி நடைபெற்று இருக்கும் பொழுது சிமெண்ட் பூச்சி பெயர்ந்து விழுந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இன்னும் ஒரு சில தினங்களில் பள்ளி மேற்கூறை சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
திருப்பத்தூர் செய்தியாளர் : வெங்கட்
கருத்துகள் இல்லை