• சற்று முன்

    திருப்பத்தூர் அருகே உள்ள பேக்கரியில் ஜாமுன் சாப்பிட்ட ராணுவ வீரரின் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்! பேக்கரி உரிமையாளரிடம் ராணுவ வீரர் குடும்பத்தினர் வாக்குவாதம்


    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோட்டை தெரு பகுதியைச் சேர்ந்த இர்ஃபான் இவர் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் மாடர்ன் ஸ்வீட் சென்டர் பெயரில் பேக்கரி நடத்தி வருகிறார்

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ராம் இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார் மேலும் தொடர் விடுமுறையின் காரணமாக இன்று ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைக்கு தங்கள் குடும்பத்துடன் 18 பேர் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்து உள்ளனர். அப்போது மாடர்ன் ஸ்வீட்ஸ் பேக்கரியில் குழந்தைகளுக்குகாக  ஜாமுன் வாங்கிக்கொண்டு ஏலகிரி மலைக்குச் சென்றுள்ளார் அப்போது ஜாமுனை சாப்பிட்ட குழந்தை நான்கு பேர் மற்றும் பெரியவர்கள் இரண்டு பேர் என்ன மொத்தம் ஆறு பேர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக ராமு ராணுவ வீரர் என்பதால் தங்களுடைய அலுவலகத்திற்கு தொலைபேசியில் மருத்துவரை அணுகி மருத்துவரின் ஆலோசனைப்படி முதல் சிகிச்சை அளித்துள்ளார்.

    பின்னர் ஏலகிரி மலையில் இருந்து வீடு திரும்பிய போது ஜாமுன் வாங்கிய பேக்கரி கடைக்கு சென்று தங்களுடைய கெட்டுப் போன ஜாமனை சாப்பிட்டதால் சாப்பிட்டதால் குழந்தைகள் உட்பட ஆறு பேர் வாந்தி மயங்கமடைந்துள்ளனர்.  இதனால் பேக்கரி கடை உரிமையாளருக்கும் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    மேலும் ராணுவ வீரரின் குடும்பத்தினர் இது உணவு பாதுகாப்பு அலுவலர் உடனடியாக இந்த பேக்கரி கடையில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.


    திருப்பத்தூர் செய்தியாளர் : வெங்கட் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad