Header Ads

  • சற்று முன்

    போலி பட்டா செய்து நிலத்தை அபகரித்த நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு



    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மம்பேட்டை பகுதியை கேசவலு நாயுடுக்கு இரண்டு ஏக்கர் அளவிலான விவசாய நிலம் இருந்துள்ளது. இந்நிலையில் அதில் ஒரு ஏக்கர் நிலத்தை கேசவலு நாயுடுவின் மகன்களான பழனிசாமி, சஞ்சீவ் குமார், மதனகோபால் ஆகிய மூவருக்கும்  எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை தன்னுடைய ஜீவனத்திற்கு வைத்திருந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு கேசவலுநாயுடு உயிரிழந்து உள்ளார். இந்த நிலையில் ஆவாரம் குப்பம் பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி நாயுடு மகன் ராமமூர்த்தி என்பவர் போலி பத்திரம் செய்து ராமமூர்த்தியின் மனைவி புவனேஸ்வரியின் பெயரில் செட்டில்மெண்ட் பாத்திரத்தை  கடந்த 2018 ஆம் ஆண்டு போலி பத்திரம் செய்து வைத்துக்கொண்டு உரிமை கொண்டாடி வருகிறார். தன் காரணமாக போலி பத்திரம் தயாரிக்க உடந்தையாக இருந்த பத்திர எழுத்தர் ராசு, மற்றும் சார் பதிவு அலுவலர் உமாபதி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் மற்றும் பிரியா ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  போலி பத்திரம் செய்த ராமமூர்த்தியிடம் இருந்து நிலத்தை மீட்டு தர வேண்டும் எனவும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  கேசவலுநாயுடு வின் மகன் பழனிச்சாமி மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பத்தூர் செய்தியாளர் : வெங்கட் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad