Header Ads

  • சற்று முன்

    "ராணிபேட்டையில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் !!!


    ராணிடெக் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று காடுகள் மற்றும் மரங்கள் நமக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கும் நம் உயிர்வாழ்வதற்கான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நமக்கு வழங்குகின்றன, மேலும் காடுகள் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க உதவுவதால், ராணிடெக், சாலிடரிடாட் மற்றும் சுட்ச் ஏசியா இணைந்து குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் உருவாக்கப்பட்டு ராணிடெக் பொதுகழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வாளகத்தில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் S.வளர்மதி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், ராணிப்பேட்டை, அவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தார் இந்நிகழ்சிசியில் செல்வி. எலியோனோரா அவாக்லியானோ, கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிபுணர், ஸ்விட்ச்- ஆசியா, சாலிடரிடாட் ஆகியோர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தனர் இதில் வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் G. ரவிசந்திரன், M.E.,, ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் E.சந்திரசேகர், அவர்களும் ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறை அலுவலர் S. கலாநிதி அவர்கள் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்திற்காக வனத்துறை சார்பாக 600 மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை வனச்சரக அலுவலர் R.சரவணபாபு, அவர்களும் இராணிடெக் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சார்பாக R. ரமேஷ்பிரசாத், தலைவர், C.M. ஜபருல்லா, நிர்வாக இயக்குனர், டாக்டர் D.சிவகுமார், பொது மேலாளர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சாலிடரிடாட் சார்பாக P.சுரில் பன்னிர்செல்வம், மேலாளர் மற்றும் நிலையத்தின் அங்கத்தினர்கள் தொழிலதிபர்கள், ஊழியர்கள்ஆகியோர்கள் ஒன்றாக சேர்ந்து மரக்கன்றுகள் நிலையவளாகத்தில் நடவு செய்தனர் 

    சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad