• சற்று முன்

    ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் கைது அலங்காநல்லூர் பகுதியில் பரபரப்பு



    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபூதகுடி கிராமத்தைசேர்ந அஜித்குமார் (வயது 30 )இவர் (காவல் பார்வை) என்ற நாளிதழ் நிருபராக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல் மதுரை காஜிமார் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் ராஜ்குமார் மற்றும் செல்லூர் பகுதியை சேர்ந்த பாண்டி ஆகிய மூவரும் சேர்ந்து பூதகுடி ஊராட்சி மன்ற தலைவர் முத்து வாடிப்பட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவரையும் ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டிஉள்ளனர்.

    மேலும் தங்களிடம்  மேற்படி நபர்கள் குறித்தஆபாச வீடியோக்கள் புகைப்படங்கள் இருப்பதாகவும் அதைவெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் இருவரும் தலா 5 கோடி வீதம் 10 கோடி தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பூதகுடி ஊராட்சி மன்ற தலைவர் முத்து அலங்காநல்லூர் காவல் நிலையத்திலும் வாடிப்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் அசோக் குமார் வாடிப்பட்டி காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். இது குறித்த புகார் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகாரை அடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அஜித்குமார் ராஜ்குமார் பாண்டி ஆகியோரது செல்போன் தகவல்களை சேகரித்த அலங்காநல்லூர் காவல்துறையினர் அவர்களை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரு சில பெயர் இல்லாத பத்திரிக்கை நாளிதழ்களின் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக இவர்கள் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்புஏற்படுத்தி உள்ளது..

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad