Header Ads

  • சற்று முன்

    எல்லையில் நின்று இந்தியாவை பாதுகாத்தவர்களுக்கு கேன்டீன் சலுகை வஞ்சனை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் மாநிலத் தலைவர் சீனிவாசன் சிறப்புரை.!



    வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடியில் எல்லை பாதுகாப்பு படை எக்ஸ் சர்வீஸ் மேன் வெல்ஃபேர் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு, வெல்ஃபேர் கேண்டீன் மீட்டிங்/ஆல் எக்ஸ்: சி.ஏ.பி.எஃப் பர்சனல் அவசரக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் துவங்கியது. 

    இந்த கூட்டத்தில் தலைமை வகித்து, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் பேசியதாவது: தற்போது ஊருக்கு ஒரு சங்கம் ஆரம்பித்து விட்டனர். மத்திய அரசு உதவி செய்ய நமக்கு முன்வரவில்லை. மாநில அரசு நிதி இல்லை என்று கையை விரித்துவிட்டது. தமிழகத்தில் 28 கேண்டீன்கள் உள்ளன என்கின்றனர். பி எஸ் எஃப் அதாவது பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் அலுவலக கேம்ப்புகள் ஆவடி, சென்னை கீரப்பாக்கம் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளன. ஆனால் நமது சங்கத்தை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. வயதானவர்களை ஏன் இந்த நிலைக்கு தள்ளுகின்றனர் என்பது புரியவில்லை. மத்திய, மாநில அரசுகள் ஓய்வு பெற்றவர்களை அலைகழித்து வருகின்றது. 


    வேலூர் மாவட்ட ஆட்சியர் உணர்வுடன் இந்த இடத்தை பார்வையிட்டு மேலும் இரண்டு ஏக்கர் இடம் தருவதாக அறிவித்துவிட்டு சென்றார். மேலும் கேண்டீன் சலுகையுடன் Liquor Licence FL4(A) சலுகையும் வழங்கினார்கள்.ஆனால் கலெக்டர் வழங்கிய Liquor Licence FL4(A)  சலுகைகளை, சென்னை Excise Department சென்ற ஜூலை 2022 முதல்  அனுமதி வழங்காமல் இருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  அக்டோபர் 2022-ல் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதி மன்றம் கடந்த 21.09.2023 அன்று தவறான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளோம். இன்னும் 90 நாட்களில் இந்த வழக்கில் நமக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒரு மாவட்ட ஆட்சியர் கொடுத்ததையே இன்னொரு மாவட்ட ஆட்சியர் நிலையில் இருப்பவர் ஏற்க மறுக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் என்ற அளவில் உள்ளது. கடந்த 1937ல் இருந்ததை 1981ல் உரிமம் இல்லை என்று நிறுத்துகின்றனர். எதற்கெடுத்தாலும் போராடி பெற வேண்டியுள்ளது, கொடுத்ததை பறிப்பதிலேயே குறியாக இருக்கிறது.  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாம் வழக்கு தாக்கல் செய்து நடத்தி வருகிறோம்.  கடந்த 23.11.2012-ல்  உள்துறை அமைச்சகம் (M H A)   மாநில தலைமை செயலாளர்களுக்கு Office Memorandam பிறப்பித்து ஓய்வு பெற்ற இராணுவப்படை (Defence forces) வீரர்களுக்கு வழங்கும் சலுகைகளை போல் ஓய்வு பெற்ற துணை ராணுவ படை வீர்ர்களாகிய  நமக்கு வழங்காமல் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. குறிப்பாக மத்திய அரசு உங்களுக்கு செய்ய எங்களிடம் எந்த திட்டமும் இல்லை என்று கையை விரித்துவிட்டது. மாநில அரசோ எங்களுக்கு திட்டமும் இல்லை.  சம்பந்தமும் இல்லை என்று சொல்லி அதுவும் கையை விரித்து விட்டது. இப்படி நமது சங்கத்தை திரும்பி பார்ப்பார் யாரும் இல்லாத பரிதாப நிலையில் நாம் இருந்து வருகிறோம். ஆனால் இந்த நிலையை மாற்றி அமைத்து 38 மாவட்டங்களிலும் தமிழகத்தில் நமது கேண்டீனை இயக்க ஏற்பாடுகளை விரைந்து செய்து தருவோம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் ராணுவத்தினருக்கு தரப்படும் அந்தஸ்தை தர வேண்டும். எங்களுக்கு என தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும். கேண்டின் வசதியை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தி தர வேண்டும். ரீ ஜாப் வழங்க வேண்டும். கல்வியில் தனி இட ஒதுக்கீடு தர வேண்டும். உயர்க்கல்வியில் குறிப்பாக எங்களது குழந்தைகளுக்கும் வாய்ப்பு தர வேண்டும். தங்களுக்கென தனி நல வாரியத்தை ஒதுக்கி தர வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பிள்ளைகள் பயில கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்பட வேண்டும். சீருடை பணியாளர் இட ஒதுக்கீடு தங்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் சீனிவாசன் பேசினார். இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகளான ராஜேந்திரன், சந்திரன், மனோகரன், ஜெயராமன், பாஸ்கர், பாண்டியன், ரவி, சதீஷ், வேலூர் மாவட்டத் தலைவர் கண்ணதாசன், பொருளாளர் வெங்கடேசன், கேன்டீன் அலுவலர் பிரபாகரன், மேலாளர் பழனிசாமி, வினாயகம்,   கேன்டீன் பாதுகாவலர்கள் ராமசாமி, வேல்முருகன், அரிமூர்த்தி மற்றும் பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்  என முன்னூறுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த சிறப்பு அவசர கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் செய்திருந்தார். விழா இறுதியில் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயராமன் நன்றியுரையாற்றி, நாட்டுப்பண் பாடல் பாடப்பட்டு விழா நிறைவுபெற்றது 

    சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad