திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதது குறித்து காரணம் தெரிந்து கொள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்..
கலைஞர் மகளிர் உரிமை தொகையானது அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முழுவதும் உள்ள தகுதியுள்ளவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மகளிர்களுக்கு கலைஞரின் உரிமை தொகை கிடைக்கவில்லை.. இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த நிலக்கோட்டை , வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராமத்து பெண்கள் கைக்குழந்தைகளுடன் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 30 நாட்கள் மேல்முறையீடு இருப்பதால் தகுதியான பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் அறிவித்தனர். இருந்த போதும் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமான கிராம பெண்கள் மற்றும் முதியவர்கள் குவிந்துள்ளனர்.. தாலுகா அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் பல மணி நேரம் காத்திருந்த பெண்களிடம் ஆதார் எண், மற்றும் செல் நம்பரை வாங்கிக் கொண்டு திருப்பி அனுப்புவதால் கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மகளிர் உரிமைத் தொகைக்கான தங்களது மனு எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என தெரியாமல் குழப்பத்துடன் செல்கின்றனர். மேலும் வந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களது 100 நாள் வேலையை விட்டு வந்ததால் சம்பளம் கட் ஆகிவிடும் என வேதனையுடன் கூறினர்..
கருத்துகள் இல்லை