கோவில்பட்டி அருகே ரயில்வே காவலர் செந்தூர் எக்ஸ்பிரஸ் முன்பு ரயிலில் பாய்ந்து தற்கொலை - ரயில்வே போலிஸ்சார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சொக்கநாத பாண்டியன் (49) என்பவர் ரயில்வே துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.. நேற்று இவர் பணிக்கு செல்வதாக கூறிவிட்டு பணிக்குச் செல்லாமல் வீடு திரும்பும் போது இன்று அதிகாலை கோவில்பட்டி சாத்தூர் இடைப்பட்ட பகுதியில் செந்தூர் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தபோது ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை ரயில்வே போலிஸ்சார் கைப்பற்றி கோவில்பட்டி தலைமை மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டார்.. இவர் தற்சமயம் செங்கோட்டை ரயில்வே தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் .இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் என்று ரயில்வே போலிஸ்சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே தலைமை காவலர் உயிரிழப்பு அவரது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
கருத்துகள் இல்லை