நிலக்கோட்டையில் விநாயகர் சதுர்த்திக்கு 200க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயார்.
விநாயகர் சதுர்த்திக்கு 200க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயார். நிலக்கோட்டையில் இருந்து வத்தலகுண்டு, நிலக்கோட்டை, கொடைக்கானல், ஆத்தூர் ஆகிய பகுதிக்கு சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
திண்டுக்கல் (மேற்கு) மாவட்டம் இந்து முன்னணி சார்பாக பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த சில மாதங்களாக இந்து முன்னணி சார்பாக நிலக்கோட்டையில் குச்சி கிழங்கு, நெல் கழிவு உமி, பேப்பர் கழிவுகளை கொண்டு ஆற்றில் கரைக்கும்போது மீன்களுக்கு உணவாகும் வகையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வந்தது. 3 அடி, 5 அடி, மற்றும் 7 அடி உயரத்தில், விநாயகர் பல்வேறு கோணங்களில் இருப்பது போல் அழகான சிலைகள் தயார் செய்யப்பட்டது. அதற்கு வர்ணம் பூசப்பட்டு அழகுபடுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பாகுபலி விநாயகர் அவதாரம், நந்தி அவதாரம், தேசியக் கொடியை ஏந்திய விநாயகர் அவதாரம் என பல விநாயகர் அவதாரங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்து முன்னணி சார்பாக திண்டுக்கல் (மேற்கு) மாவட்டமான நிலக்கோட்டை, வத்தலகுண்டு, கொடைக்கானல், ஆத்தூர், சின்னாளபட்டி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 200 கற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு வேன் மற்றும் லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இன்று 17 -ஆம் தேதி அந்தந்த பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு 18-ஆம் தேதி, அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு, அந்த சிலைகளை, செப்டம்பர் 19- தேதி வத்தலகுண்டு பகுதிகளில், முக்கிய வீதிகள் காளியம்மன் கோவில் தொடங்கி மெயின் ரோடு, காந்திநகர், மார்க்கண்டேயன் கோவில் தெரு, தெற்குத் தெரு, ப்ளீஸ் புறம் வழியாக, மேளதாள வாணவேடிக்கையுடன், ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைக்க உள்ளனர். இந்த சிலைகளை இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர், வத்தலகுண்டு அண்ணாதுரை, மற்றும் நிர்வாகிகள், அந்தந்த பகுதிகளுக்கு லாரிகளில் விநாயகர் சிலைகளை அனுப்பி வைத்தனர்
செய்தியாளர் ம.ராஜா
கருத்துகள் இல்லை