கோவில்பட்டியில் அறிஞர் அண்ணா அவர்களின் 152வது பிறந்தநாள் விழா
அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அதிமுக புதிய கழகக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டில் அதிமுக புதிய கழகக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் முன்னிலையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் மகளிர் அணினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை