Header Ads

  • சற்று முன்

    அதிமுக முன்னாள் அமைச்சர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த விளாத்திகுளம் போலீசார்


    முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை பொதுவெளியில் இழிவாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த விளாத்திகுளம் போலீசார்

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், நேற்றைய தினம்(15.09.2023) மாலை விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகை தந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடம் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி என ஒட்டுமொத்தமாக முதல்வரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாக பேசினார். இதனை கண்டித்து விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழைத்த புகார் அளித்தனர். திமுகவினர் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(B), 153(A), 505(2) , ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad